எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் புதிய மாற்றம் ஒன்றை எதிர்பார்க்கின்ற நிலையில் அதனை தான் மதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த அரசாங்கத்துடன் இணைந்து தேசத்தை மீளக் கட்டியெழுப்ப தன்னால் இயன்ற உதவிகளை வழங்கியதாகவும், ஆனால் பொதுமக்களுக்கு மாற்றம் தேவை என்பது புலனாகிறது என்றும் செஹான் சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அரசாங்கத்திலும் நாடாளுமன்றத்திலும் மாற்றத்திற்கான மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளிக்கின்றோம். இதன்படி பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை.
அதற்கு பதிலாக, தன்னை முன்னர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்த அநுராதபுர மக்களுக்கு சேவை செய்வதில் பணியாற்றுவேன்.
எவ்வாறெனினும், எதிர்காலத்தில் தேசத்திற்கு தேவைப்படும் போதெல்லாம் தனது நிபந்தனையற்ற உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.