கிளாமர் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தினர்.. விவாகரத்தின் போது சமந்தா எடுத்த முடிவு

9

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து 2022ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புஷ்பா. இப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடிகை சமந்தா நடனமாடி இருப்பார்.

இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று சமந்தா ஆடிய நடனமும் ஒன்று. இந்த பாடலில் நடனமாட சமந்தாவிற்கு ரூ. 5 கோடி சம்பளம் தரப்பட்டது என தகவல்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், இந்த பாடலில் நீ நடனமாட கூடாது என குடும்பத்தினரும், தோழிகளும் எதிர்ப்பு தெரிவித்ததாக சமந்தா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இதில் அவர் பேசுகையில் “புஷ்பா படத்தில் நடனமாட வாய்ப்பு வந்தபோது நான் விவாகரத்து முடிவு எடுத்திருந்தேன். அந்த நேரத்தில் என்னிடம் எனக்கு தோழிகளும் சரி, குடும்பத்தினரும் சரி விவாகரத்து முடிவை அறிவிக்க போற நேரத்தில் கிளாமர் பாடலுக்கு நடனமாட வேண்டாம் என கூறினார்கள்”.

“ஆனால் அவர்களின் எதிர்ப்பை மீறி அந்த பாடலில் நான் நடனம் ஆடினேன். அது மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதை அனைவரும் அறிந்தது தான்”.

“அந்த வாய்ப்பை நிராகரிக்க என்னிடம் எந்த காரணமும் இல்லை. எதற்காக நான் மறைக்க வேண்டும். நான் எந்த தவறும் செய்யவில்லை. திருமண வாழ்க்கையில் நான் நூறு சதவீதம் உண்மையாக இருந்தேன். ஆனால், அது எனக்கு ஒர்க் ஆகவில்லை” என பேசினார்.

இது பழைய தகவலாக இருந்தாலும் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.