இலங்கை விமான நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நடைமுறை

15

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு வந்து செல்வதற்கும் புறப்படுவதற்கும் புதிய கடவுச்சீட்டு முத்திரைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய (Harsha Ilukpitiya) கருத்துப்படி, இந்த ஆண்டு ஜூன் மாதம் 01ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய முத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கையில் உள்ள ஏனைய சர்வதேச விமான நிலையங்களிலும் புதிய முத்திரைகளின் பாவனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த திணைக்களம் வருகைக்காக நீல நிற முத்திரையையும் புறப்படுவதற்கு பச்சை நிற முத்திரையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

விமான நிலையத்தைத் தவிர, துறைமுகங்கள் மற்றும் பயணிகள் பயணக் கப்பல்களுக்கும் இதேபோன்ற முத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு துறைக்கும் மூன்று தனித்தனி முத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஹர்ஷ இலுக்பிட்டிய கூறியுள்ளார்.

புதிய முத்திரைகள் அறிமுகம் தொடர்பான விவரங்களை அளித்த ஹர்ஷ , 1948ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட முத்திரையை விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் பயன்படுத்தி வருவதோடு தற்போது அது பல்வேறு தரப்பினரால் எளிதில் தவறாக பயன்படுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பழைய முத்திரையில் முறைகேடு நடப்பதாக பல முறைப்பாடுகள் வந்தாலும், புதிய முத்திரைகளை அறிமுகம் செய்வது பல ஆண்டுகளாக தொடர்ந்து தாமதமாகி வருவதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், நகல் எடுக்க முடியாத வகையில் அவை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

Comments are closed.