ஆளும் கட்சியை சேர்ந்த சிலர் அதிருப்தியில்!

6

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த சிலர் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சியில் சந்தர்ப்பம் கிடைக்காதவர்களே இவ்வாறு அதிருப்தி அடைந்துள்ளனர்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடுவதற்கு பெரும் எண்ணிக்கையிலானவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இவ்வாறான பின்னணியில் போட்டியிட சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் அதற்கு முன்னரும் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக அயராது உழைத்தவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

எனினும் பலர் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருவதனால் பலருக்கு சந்தர்ப்பம் மறுக்கப்பட உள்ளது.

இதனால் கட்சிக்கு ஆதரவான பலர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 11ம் திகதி வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணியுடன் பூர்த்தியாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.