பிரபல நடிகை தமிதா அபேரட்ன எதிர்வரும் பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட உள்ளார்.
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அவர் போட்டியிட உள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பு மனு பட்டியலில் தமிதா கையொப்பமிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதங்கள் குறைக்கப்படும் என கூறப்பட்டு வரும் பின்னணியில் மக்களின் நலனுக்காக தாம் தேர்தலில் களமிறங்குவதாக தமிதா தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் தாம் வெளியிட்ட கருத்துக்களினால் யாருக்கேனும் மன வருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்காக வருந்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.