இலங்கையிலே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிப்பீடம் ஏறிய பின் நாளுக்கு நாள் ஒவ்வொரு புதிய தகவல்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவால் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.
அந்த அறிவித்தலின் பிரகாரம் செப்டெம்பர் 11ம் திகதி முதல் மத்திய வங்கியின் ஆளுநர்களிற்கான ஓய்வூதியத்தை இரத்து செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மத்திய வங்கியின் ஆளுநர்களிற்கு இவ்வாறான நடவடிக்கை எடுப்பதற்கு பிரதான காரணமாக அமைந்தது நாடு வங்குரோத்து நிலையை அடையும் போது அப்போதைய மத்திய வங்கி ஆளுநர்களாக இருந்தவர்களின் செயற்பாடுகளே காரணமாகும்.
குறிப்பாக கடந்த காலத்தில் மத்திய வங்கி ஆளுநராக இருந்த அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் அர்ஜுன மகேந்திரன் இருவரும் நாட்டில் உருவான பொருளாதார நெருக்கடிகளுக்கு முக்கியமானவர்களாக காணப்பட்டமையே இந்நடவடிக்கைக்கான காரணமாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் நாட்டை நெருக்கடிக்குள் கொண்டு சென்றவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து தற்போது கேள்விகள் முன்வைக்கப்படுகின்றது.
Comments are closed.