சென்சேஷனல் இயக்குனருடன் இணையும் கார்த்தி.. புதிய கூட்டணி

10

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் கார்த்தி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் மெய்யழகன்.

பிரேம் குமார் இயக்கிய இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து அரவிந்த் சாமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள மெய்யழகன் திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 43 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

மெய்யழகன் படத்தை தொடர்ந்து கார்த்தி பிரபல இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து வரும் படம் தான் வா வாத்தியாரே. இதை தவிர கைதி 2 உருவாகவுள்ளது. இந்த நிலையில் கார்த்தியின் அடுத்த படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது.

அதன்படி, சமீபத்தில் வாழை எனும் சென்சேஷனல் ஹிட் கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் கார்த்தி நடிக்கவுள்ளார் என தகவல் கூறுகின்றனர். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கப்போவதாக சொல்லப்படுகிறது.

இந்த கூட்டணியில் உருவாகும் இப்படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments are closed.