தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்துரைக்கும் ஆவணக் காட்சியகம் நல்லூரில் திறந்து வைக்கப்படவுள்ளது.
குறித்த ஆவணக் காட்சியகம், இன்று (20.09.2024) வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.
“பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!” எனும் தொனிப்பொருளுடன் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயம் முன்றலில் இந்நிகழ்வு நடாத்தப்படவுள்ளது.
அத்துடன், இந்நிகழ்வில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் பங்கேற்கவுள்ளனர்.
தியாக தீபம் திலீபனின் வரலாற்று புகைப்படங்கள் இதன்போது தொகுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படவுள்ளன.
Comments are closed.