பிக் பாஸ் 8ல் நுழையும் காமெடி ஜாம்பவான்.. யாரும் எதிர்பார்காத ஒருவர்!

10

பிக் பாஸ் ஷோவின் 8வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. தற்போது போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியில் குழிவினார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சின்னத்திரை நடிகர்கள், விஜய் டிவி நட்சத்திரங்கள் என பலரும் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த முறை விஜய் சேதுபதி தொகுப்பாளராக இணைந்து இருப்பதால் ஷோ எப்படி இருக்க போகிறது என்கிற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

வழக்கமாக பிக் பாஸ் என்றால் இளம் வயதில் இருப்பவர்கள் தொடங்கி வயதானவர்கள் வரை பல பிரபலங்கள் போட்டியாளர்களாக வருவார்கள். அந்த விதத்தில் காமெடி நடிகர் செந்தில் போட்டியாளராக வர இருக்கிறார் என ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

அவர் வத்தால் பிக் பாஸில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். கவுண்டமணி உடன் சேர்ந்து செந்தில் நடித்த காமெடி காட்சிகள் எல்லாம் தற்போதும் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

செந்தில் பிக் பாஸ் வருவாரா இல்லையா என்பதை ஷோ தொடங்கும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Comments are closed.