கடந்த ஓகஸ்ட் மாதத்தில் உற்பத்தி துறையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அந்தவகையில், கடந்த ஓகஸ்ட் மாதத்தில், உற்பத்தித்துறையில் இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் பார்வையில் 55.5 சுட்டெண் எண்கள் பதிவாகியுள்ளன.
புதிய முதலீடுகள் மற்றும் தயாரிப்புகளின் அதிகரிப்புக்கு உணவு மற்றும் பானங்கள் உற்பத்தித்துறை முக்கியமாக பங்களிப்பதாக மத்திய வங்கி கூறுகின்றது.
மேலும், புதிய முதலீடுகள் மற்றும் தயாரிப்புகளின் வளர்ச்சி காரணமாக இந்த மாதத்தில் மொத்த கொள்முதல் அதிகரித்துள்ளது.
இதேவேளை, கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாதத்தில் வேலைவாய்ப்பு குறைந்துள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
Comments are closed.