என்ன நடந்தது என தெரியாமல் பிரியங்காவை தப்பா பேசாதீங்க.. ஆதரவாக களமிறங்கிய CWC போட்டியாளர்

6

குக் வித் கோமாளி 5ம் சீசன் இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் அதில் இருந்து மணிமேகலை விலகுவதாக அறிவித்து இருக்கிறார். அதற்கு காரணம் பிரியங்கா அதிகம் தனது வேலையில் தலையிட்டது தான் என அவர் கூறி இருக்கிறார்.

பிரியங்கா அல்லது மணிமேகலை.. இருவரில் யார் செய்தது தவறு என இணையத்தில் வாக்குவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சூப்பர்சிங்கர் புகழ் பூஜா CWCல் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார். அவர் இந்த சண்டை பற்றி கருத்து பதிவிட்டு இருக்கிறார்.

‘நடந்தது என்ன என்பது தெளிவாக அறியாமல் யாரும் ஒரு பெண்ணை பற்றி மிகவும் தரக்குறைவாக விமர்சிக்க வேண்டாம். ஒருவரை பாராட்ட இன்னொருவரை மிகவும் கேவலமாக பேச வேண்டுமா.’

‘டிவியில் சில மணி நேரம் பார்ப்பதால் ஒருவரது உண்மையான முகம் தெரிந்துவிடாது. சமூக வலைத்தளங்களில் மற்ற எல்லோரிடமும் அன்பாக இருங்கள் என பூஜா வெங்கட் பதிவிட்டு இருக்கிறார்.

பிரியங்கா கடும் ட்ரோல்களை சந்தித்து வரும் நிலையில் அதற்கு தான் பூஜா இப்படி பதிவிட்டு இருக்கிறார்.

Comments are closed.