நடிகை கீர்த்தி சுரேஷின் ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா! இதோ

6

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் இன்று இந்தியளவில் பிரபலமாகியுள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து பல்வேறு படங்களில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்த கீர்த்தி, தற்போது பாலிவுட் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார்.

இயக்குனர் அட்லீ தயாரிப்பில் உருவாகும் பேபி ஜான் படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். தமிழில் வெளிவந்த தெறி படத்தின் இந்தி ரீமேக் தான் இந்த படம். வருகிற டிசம்பர் மாதம் இப்படத்தை வெளியிடவுள்ளனர்.

நடிகை கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளிவந்துள்ளது. ஆனால், அவருடைய ஆண்டு வருமானம் குறித்து தகவல்கள் பெரிதாக வெளிவந்தது இல்லை. இந்த நிலையில், பிரபல மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி நடிகை கீர்த்தி சுரேஷின் ஆண்டு வருமானம் குறித்து சமீபத்தில் பேசியுள்ளார்.

இதில் சினிமாவில் படங்களில் நடிப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 20 கோடி சம்பாதித்து வருகிறாராம் கீர்த்தி. மேலும் விளம்பர படங்கள் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவுகள் மூலம் பெரியளவில் கீர்த்தி சுரேஷ் சம்பாதித்து வருகிறாராம். இதன்மூலம் கடந்த ஆண்டு கீர்த்தியின் வருமானம் மட்டுமே ரூ. 120 கோடி இருக்கும் என பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.

Comments are closed.