ஜனாதிபதி தேர்தலில் முத்தரப்பு போட்டி! ஒருவருக்கு சாதகமாக மாறியுள்ள கள நிலவரம்

7

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்டுள்ள முத்தரப்பு போட்டியானது ரணில ்விக்ரமசிங்கவுக்கே சாதகமாக அமைந்துள்ளது என்று சப்ரகமுவ ஆளுநர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கேகாலையில் இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்’ பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அனைத்து கட்சிகளும் இணைந்திருப்பது பெரும் பலமாகும். இவ்வாறான மேடை சஜித்திற்கோ அநுரவுக்கோ கிடையாது.

இவ்வாறான ஒற்றுமையான அணியை ரணில் விக்ரமசிங்க தான் ஏற்படுத்தினார். உங்கள் தலைவரைத் தெரிவு செய்யும் இந்தத் தேர்தலில் சரியாக முடிவெடுக்க வேண்டும். எந்தக் கட்சியை வெல்ல வைப்பதற்கும் நாம் அணிதிரளவில்லை.

நாட்டின் எதிர்காலமே பிரதானமானது. அதற்காகவே ஒன்று சேர்ந்துள்ளோம். கடந்த அனைத்து தேர்தல்களிலும் இரு அணிகளே இருந்தன.

இம்முறை முத்தரப்பு போட்டியுள்ளது. முத்தரப்பு போட்டியிருப்பது ரணில் விக்ரமசிங்கவுக்கு தான் சாதகமானது. முத்தரப்பு போட்டியால் எதிரணி வாக்குகள் தான் சிதறும் என குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.