பாவனா வெளியேறவும் பிரியங்கா தான் காரணமா? உண்மை காரணத்தை சொல்லி காட்டமான பதிலடி

6

சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளர்கள் இடையே வெடித்திருக்கும் சண்டை தான் தற்போது பெரிய பேசுபொருளாகி இருக்கிறது. குக் வித் கோமாளியில் தொகுப்பாளராக இருக்கும் மணிமேகலை மற்றும் போட்டியாளராக இருக்கும் VJ பிரியங்கா இடையே வெடித்த பிரச்சனை காரணமாக மணிமேகலை அந்த ஷோவில் இருந்து விலகிவிட்டார்.

தனது வேலையில் பிரியங்கா அதிகம் தலையிடுவதாக மணிமேகலை ஓப்பனாக குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.

இந்நிலையில் பல வருடங்களுக்கு முன்பு விஜய் டிவியில் சூப்பர்சிங்கர் ஷோவை தொகுத்து வழங்கிய VJ பாவனா சேனலை விட்டு வெளியேற பிரியங்கா தான் காரணம் என ஒரு செய்தி இணையத்தில் வந்த நிலையில், அவரே அது பற்றி ட்விட்டரில் காட்டமாக பதிவிட்டு இருக்கிறார்.

“நான் பிரியங்கா பற்றி அப்படி எப்போதும் சொன்னதில்லை. அப்படி ஒரு வீடியோ இருந்தால் காட்டுங்க. அப்புறம் பேசலாம்.”

“நான் சூப்பர்சிங்கர் ஷோவில் இருந்து வெளியேறியதற்கு காரணம் வேறு துறையில் என் கனவை அடைய தான். நானும் என் கணவரும் மும்பையில் ஒன்றாக இருக்கிறோம். அங்கேயே வேலை செய்ய வேண்டும் என்று எடுத்த முடிவு அது. அவ்வளவுதான்” என பாவனா கூறி இருக்கிறார்.

Comments are closed.