இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் படி பாரதீய ஜனதாக்கட்சி 285 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 285 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள இந்திய மக்களவைத் தேர்தல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (NDA), இந்தியா கூட்டணிக்கும் இடையிலான போட்டியாக கருதப்படுகின்றது.
மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் திகதி வரை நடைபெற்றது. 543 மக்களவைத் தொகுதிகளில் ஆட்சியைப் பிடிக்க 272 இடங்கள் தேவை.
இந்நிலையில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்திய மக்களவைத் தேர்தலில் (Lok Sabha elections) பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (04.06.2024) காலை சரியாக 8 மணிக்கு ஆரம்பமாகி உள்ளது.
இதில் பாஜக (bjp) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) 540 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது.
441 தொகுதிகளில் பாஜக தனித்து தேர்தலைச் சந்தித்துள்ளது. அதன் கூட்டணிக் கட்சிகள் 99 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளன.
இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 328 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டுள்ளன.
இந்தத் தேர்தலில் பெரும்பான்மையை பாஜக கூட்டணி பெறும் என்றும், பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தொடர்ந்து மூன்றாவது முறையாக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிப்பார் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
Comments are closed.