இந்தியாவின் கோடீஸ்வர பெண்ணிற்கு தேர்தலில் வாய்ப்பளிக்காத பாஜக.., அவர் எடுத்த உடனடி முடிவு

12

நாட்டின் கோடீஸ்வர பெண் சாவித்ரி ஜிண்டால் என்பவருக்கு பாஜக வாய்ப்பளிக்காததால் அவர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவின் கோடீஸ்வர பெண்கள் பட்டியலில் ரூ.3.31 லட்சம் கோடியுடன் முதலிடத்தில் இருப்பவர் சாவித்ரி ஜிண்டால். இவருடைய மகன் நவீன் ஜிண்டால் என்பவர் சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

பின்னர் பாஜக சார்பில் சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் குருஷேத்ரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது, தனது மகனுக்கு ஆதரவாக சாவித்ரி ஜிண்டால் பிரச்சாரம் செய்தார்.

இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் வரும் ஓக்டோபர் 5 -ம் திகதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் ஹிசார் தொகுதியில் போட்டியிட சாவித்ரி ஜிண்டால் விருப்பம் தெரிவித்தார்.

ஆனால், அண்மையில் வெளியிடப்பட்ட 67 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலில் சாவித்ரி ஜிண்டால் பெயர் இல்லை. அதற்கு மாறாக அந்த தொகுதியில் ஏற்கனவே எம்.எல்.ஏவாக இருக்கும் கமல் குப்தாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சாவித்ரி ஜிண்டாலின் ஆதரவாளர்கள் அவரை தேர்தலில் போட்டியிடுமாறு வலியுறுத்தினார். அதன்படி, தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

ஆனால், அவர் சுயேச்சையாக போட்டியிடுவாரா அல்லது காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சி சார்பில் போட்டியிடுவாராஎன்று தெரியவில்லை.

Comments are closed.