கணவர் டொனால்டு ட்ரம்பை மெலனியா உடனடியாக விவாகரத்து செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ள நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ், ஆபாச நடிகையுடன் தொடர்பு வைத்திருந்தது காரணமல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புக்கு எதிரான நீதிமன்ற விசாரணை சுமார் 6 வார காலம் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த 6 வார காலமும் ஒருமுறை கூட மெலனியா நீதிமன்றத்தில் காணப்படவில்லை.
ஆனால் ட்ரம்ப் குடும்பத்தின் எஞ்சிய உறுப்பினர்கள் பலர் விசாரணையின் போது ட்ரம்புக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் காணப்பட்டனர். இந்த நிலையில், ட்ரம்ப் – மெலனியா தம்பதியின் 19 ஆண்டு கால திருமண வாழ்க்கை விவாதப்பொருளாக மாறியது.
மெலனியாவுடன் திருமணம் முடித்த ஓராண்டில் ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் உடன் ரகசிய உறவை ஏற்படுத்திக்கொண்டவர் ட்ரம்ப். தற்போது ட்ரம்புடனான உறவை மெலனியா முறித்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை ஸ்டோர்மி டேனியல்ஸ் முன்வைத்துள்ளார்.
அவர்கள் இருவருக்கும் இடையே என்ன ஒப்பந்தம் என்பது தமக்கு தெரியாது என குறிப்பிட்டுள்ள ஸ்டோர்மி டேனியல்ஸ், மிக விரைவில் மெலனியா தமது கணவர் ட்ரம்பை கைவிடுவது நல்லது என்றார்.
தம்முடனோ அல்லது பிற பெண்களுடனோ ட்ரம்ப் வைத்திருந்த தொடர்புகளால் அல்ல, ட்ரம்ப் தற்போது குறைகேட்டில் ஈடுபட்ட குற்றவாளி. தமது ஆதாயத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடியவர் என்பது நீதிமன்றத்தால் அம்பலமாகியுள்ளது.
டொனால்டு ட்ரம்பை இனிமேலும் மெலனியா நம்புவது சிக்கலை எதிர்கொள்ள வைக்கும் என்றும் ஸ்டோர்மி டேனியல்ஸ் எச்சரித்துள்ளார். இதனிடையே மெலனியா தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள டொனால்டு ட்ரம்ப்,
தமது மனைவி நீதிமன்றத்தில் காணப்படாதது தமக்கு பிரச்சனை அல்ல என்றும், மெலனியா இந்த விவகாரத்தை ஏற்றுக்கொள்ள சிரமப்படுவார் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.