பிரித்தானியாவுக்கு வேலைக்கு வருவதற்காக நிலத்தை விற்ற இந்தியர்: காத்திருந்த ஏமாற்றம்

15

முதியோரை கவனித்துக்கொள்ளும் வேலைக்கான விசாவில் இந்தியாவிலிருந்து பிரித்தானியா வந்த பலர், தாங்கள் வேலைக்காக விண்ணப்பித்த ஒரு நிறுவனமே பிரித்தானியாவில் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள். அப்படி ஒரு மோசடி பிரித்தானியாவில் நடந்துவரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த இதுவரை எந்த முறையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.

குடும்பத்தின் கடனை அடைப்பதற்காக பிரித்தானியாவுக்கு செல்ல முடிவு செய்தார் தென்னிந்தியாவில் வாழும் அகில் ஜென்னி (Akhil Jenny). ஆனால், பிரித்தானியாவுக்குச் செல்வதற்கு பணம் வேண்டுமே? ஆகவே, தங்கையின் திருமணத்துக்காக வைத்திருந்த நிலத்தை விற்று, 16,000 பவுண்டுகளை ஏஜண்ட் ஒருவருக்கு கொடுத்து sponsorship certificateம் விசாவும் பெற்றார் அகில்.

அவருக்கு, வாரத்துக்கு 37.5 மணி நேர வேலையும், ஆண்டொன்றிற்கு 21,580 பவுண்டுகள் சம்பளமும் கிடைக்கும் என உறுதியளிக்கப்பட்டது.

குடும்பக் கஷ்டம் எல்லாம் கொஞ்ச காலத்தில் மாறிவிடும் என்ற நம்பிக்கையுடன் பிரித்தானியா வந்திறங்கிய அகிலுக்கு பெருத்த ஏமாற்றம் காத்திருந்தது. ஆம், அவருக்கு ஸ்பான்சர் செய்ததாக கூறிய நிறுவனத்தை தொலைபேசியில் அழைத்தால், அங்கே அவருக்கு வேலை இல்லை என்ற பதில் வந்தது. அதிர்ச்சியடைந்த அகில், வேறு வழியில்லாமல் அந்த நிறுவன அலுவலரிடமே கென்சிக் கூத்தாடி சுத்தம் செய்யும் வேலை ஒன்றை பெற்றார்.

அகில் இப்போது Sheffieldஇல் அவரைப்போலவே ஏமாந்த மற்றொரு புலம்பெயர்ந்தவரான Geo Ambooken என்பவருடைய குடும்பத்துடன் தங்கியிருக்கிறார்.

செவிலியர் படிப்பு முடித்துவிட்டு, வயதானவர்களை கவனித்துக்கொள்ளும் வேலைக்காக வந்த இவர்கள், இப்போது சம்பந்தமே இல்லாமல் ஏதேதோ வேலைகளை செய்துகொண்டிருக்கிறார்கள். சொந்த நாட்டின் நிலத்தை விற்று பிரித்தானியாவுக்கு வந்தவர்களால், வீட்டுக்கு ஏதாவது பணம் அனுப்பமுடியுமா என்பதே கேள்விக்குறியாகிவிட்டதால், வாங்கிய கடனை அவர்கள் எப்போது அடைக்கப்போகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது.

இவர்களைப்போலவே நல்ல சம்பளம் கிடைக்குமென்று நம்பி பிரித்தானியாவுக்கு வந்து ஏமாந்த கேரளாவைச் சேர்ந்த நிஷாமோள் செபாஸ்டியன் என்னும் பெண், தான் ஏமாற்றப்பட்டது குறித்து தன் நாட்டு முதலமைச்சருக்கே கடிதம் எழுதிவிட்டார். அவர் இந்த பிரச்சினையில் தலையிட, தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரித்தானிய அதிகாரிகள் உறுதியளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உங்களுக்கு சாப்பாட்டுக்கு கஷ்டமாக இருந்தால், உணவு வங்கியில் போய் உணவைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்கிறார்கள் பொலிசார் என்கிறார் நிஷாமோள்.

Comments are closed.