உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டதோடு, 200 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறியதாவது, உக்ரைனின் பொல்டாவா பகுதியில் உள்ள கல்வி நிலையம் மற்றும் மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் குறைந்தது 50 பேர் பலியாயினர். 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். குறித்த தாக்குதலில் ரஷ்யா இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தி உள்ளது என்றார்.
இதற்கிடையே, உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இது ‘காட்டுமிராண்டித்தனமான’ செயல் என்று கூறியுள்ளது.
மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் உக்ரைன் ரஷ்யா மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாகவே ரஷ்யா உக்ரைன் மீது திடீர் தாக்குதல் நடத்தி உள்ளமை
குறிப்பிடத்தக்கது.
Comments are closed.