ஆட்களை பதிவு செய்யும் திருத்தச் சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த திருத்தச் சட்ட மூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் டிஜிட்டல் கட்டமைப்பின் கீழ் ஆள் அடையாளத்தை உறுதி செய்யக் கூடிய கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்காக சட்ட வரைவுகளை மேற்கொள்ள 2020ம் ஆண்டில் அப்போதைய அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
இந்த சட்ட வரைவுத் திட்டத்திற்கு சட்ட மா அதிபர் அனுமதி வழங்கியிருந்தார்.
இதன் அடிப்படையில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Comments are closed.