ரஷ்யாவிற்கான ஆயுத விநியோகம் தொடர்பில் பிரான்ஸ் விடுத்துள்ள எச்சரிக்கை

13

உக்ரைனுக்கு எதிராக போரை நடத்திவரும் ரஷ்யாவிற்கு ஆயுதங்களை விற்கும் அனைத்து நாடுகளுக்கும் பிரான்ஸ்(France) எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஐ.நா. பாதுகாப்பு அமையத்தில் பேசிய பிரான்ஸ் நாட்டின் நிரந்தர பிரதிநிதி நிக்கோலஸ் டெ ரிவியர் (Nicolas de Riviere), ஈரான் ரஷ்யாவிற்கு மேற்கொண்டு ஆயுதங்களை விற்பனை செய்யும் பட்சத்தில், பிரான்ஸ் மற்றும் சர்வதேச சமூகம் அதற்கு தீவிரமாக பதிலளிக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அனைத்து நாடுகளும் ரஷியாவிற்கு dual-purpose goods மற்றும் போருக்கு உதவும் கூறுகளை வழங்குவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும், உக்ரைனுக்கு ஆயுத உதவி அளிப்பது உலக அமைதியை காக்க உதவுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவை போரிடுவதிலிருந்து நிறுத்துவதற்கு உக்ரைனின் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதியாக ஆதரிப்பதுதான் வழி என்று அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக, சமாதான பேச்சுவார்த்தைக்காக எந்த ஒரு தாக்குதல் அடைந்த நாட்டின் சரணாகதி ஆமோதிக்கப்படாது என்றும், சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் நீடித்த சமாதானத்தை உருவாக்க இது போதுமானதாக இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.