குரங்கு அம்மை தொற்று உலகளாவிய ரீதியில் உருவெடுத்துள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனம் சர்வதேச அவசர நிலையை பிறப்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாகவும், 517 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தொற்றினால் 13 நாடுகளில் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 160 சதவீதம் அளவுக்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தற்போது குரங்கு அம்மை தொற்று தொடர்பில் சுகாதார அவசர நிலையை உலக சுகாதார நிறுவனம் பிறப்பித்துள்ளது.
இதேவேளை, குரங்கு அம்மை தொற்றை கட்டுப்படுத்த கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அவசர நிலை பிறக்கப்பட்டு, 2023ஆம் ஆண்டு மே மாதம் மீண்டும் பெறப்பட்டுள்ளது.
அதன்படி, இரண்டு ஆண்டுகளில் 2ஆவது முறையாக அவசர நிலை பிறக்கப்பட்டுள்ளது.
மேலும், குரங்கு அம்மை பாலியல் தொடர்பு காரணமாக ஆண்களிடம் இருந்தே பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments are closed.