சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்த வருடத்தில் இதுவரை 1,271,432 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அவர்களில் பெரும்பாலானோர் இந்திய சுற்றுலா பயணிகள் எனவும், 237,649 பேர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரஷ்யா, இந்தியா, ஜேர்மனி, பிரித்தானியா, சீனா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
Comments are closed.