இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 8, 2024, குரோதி வருடம் ஆடி 23, வியாழக் கிழமை, சந்திரன் சிம்ம ராசியில் பூரம், சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் உள்ள அவிட்டம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று திடீர் பணவரவு கிடைக்க வாய்ப்புள்ளது. இது உங்களின் எதிர்காலம் தொடர்பான கவலையிலிருந்து விடுபட உதவும். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உங்களின் வியாபாரத்தில் முன்னேற்றத்தை கண்டு மகிழ்வீர்கள். இன்று ஆடம்பரம் சூழலை அனுபவிப்பீர்கள். மாணவர்கள் தேர்வில் சிறப்பான வெற்றியை பெறலாம். வியாபாரம் சம்பந்தமாக பயணம் மேற்கொள்ள வேண்டியது இருக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் உணவு மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று உங்களின் வருமானம் குறையவும், செலவுகள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. செயலில் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. புதிய திட்டங்களை கவனமாக செயல்படுத்தவும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று சில முக்கியமான வேலைகளை சிறப்பாக முடிக்க முடியும். குடும்ப தகராறு, மன வருத்தம் காரணமாக கவலை ஏற்படும். ஒரு பணம் தொடர்பான விஷயத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். உங்களின் முதலீடுகள் எதிர்காலத்தில் சிறப்பான லாபத்தை தரும். இன்று பண பலனை பெறுவீர்கள்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் நிமித்தமான பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. உங்களின் தொழிலில் முன்னேற்றம் குறைவாக இருக்கும். குழந்தைகளின் கல்வி தொடர்பாக மன அழுத்தம் ஏற்படும். இன்று உங்களின் பெற்றோரிடம் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பேச்சிலும் கவனம் தேவை. மாணவர்கள் சில பண பற்றாக்குறையைச் சந்திக்க வாய்ப்பு உள்ளது.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று தனிப்பட்ட உறவில் அன்பும், ஒத்துழைப்பும் கிடைக்கும். உங்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தொழிலில் வாழ்க்கைத் துணையின் ஆலோசனை சிறப்பான பலனை தரும். உங்களின் நிதிநிலை வலுவாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று எந்த சூழ்நிலையிலும் நிதானமாகவும், முழு மனதுடனும் முடிவு எடுப்பது அவசியம். நீங்க எங்காவது முதலீடு செய்ய நினைத்தால் அதில் அதிர்ஷ்டத்தின் மூலம் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சிலரின் உடல்நிலை மோசம் அடைய வாய்ப்பு உள்ளது. இதனால் அலைச்சலும், பணச் சொல்லவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இன்று மாணவர்கள் ஆசிரியர்களின் ஆசியை பெறுவீர்கள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று கூட்டுத்தொழில் செய்யக் கூடியவர்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய நாள். தனிப்பட்ட உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் அனைத்து பொருட்களையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தையும் சொத்து சம்பந்தமான தகராறுகள் தீரும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று . உடல் மற்றும் மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. எந்த ஒரு வேலையையும் தைரியமாக செய்வது அவசியம். எதிரிகளால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று உங்களின் மன ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும். சிலர் சுற்றுலா செல்ல திட்டமிடுவதில் வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் பதவி அல்லது சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான பலன் கிடைக்கக் கூடிய நாள். இன்று உங்களின் உடல்நிலை மற்றும் செலவு செய்தல் கவனம் தேவை. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். இன்று அண்டை வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். விட்டுக்கொடுத்துச் செல்லவும். இன்று பொழுதுபோக்கு விஷயத்தில் அதிக நேரத்தையும், பணத்தையும் செலவு செய்வார்கள்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று வாழ்க்கையில் சில முக்கியமான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கடினமான காலங்களைக் கடக்க வேண்டிய நாள். உங்கள் செயலில் பொறுமையாக செயல்படவும். இன்று வங்கி அல்லது நிறுவனத்தில் கடன் வாங்க நினைப்பவர்கள், அது அவசியமா என்பதை உணர்ந்து, ஆலோசித்துச் செயல்படவும். வாழ்க்கைத் துணையின் உடல் நிலையில் குறை ஏற்பட வாய்ப்புள்ளது. மாலை நேரத்தில் அலைச்சல் அதிகரிக்கும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படக்கூடிய நாள். இது உங்களை உங்கள் வேலைகள் செய்து முடிப்பதில் தடங்கல் ஏற்படுத்தும். இன்று நிதி இழப்புகளை சந்திக்க வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகளின் திருமணம் தொடர்பான விஷயங்கள் பற்றி கவலை தரும். பிறரிடம் சிக்கி உள்ள பணம் திரும்ப கிடைக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரத்தில் வெற்றி அடைவீர்கள். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தனிப்பட்ட உறவில் தகராறுகளைத் தவிர்க்கவும். இன்று உங்களின் ஈகோவை கட்டுப்படுத்த வேண்டிய நாள். உங்களின் பிள்ளைகளின் செயல்பாடு கண்டு மகிழ்வீர்கள். தந்தையே உடல் நிலையில் கவனம் தேவை. உங்களின் நிதி ஆதாயங்கள் அதிகரிக்கும்.
Comments are closed.