கமலுக்கு பதில் நயன்தாராவா? இல்லை இந்த முன்னணி நடிகரா? பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார்!
கடந்த 7 ஆண்டுகளாக பிக் பாஸ் முதல் சீசனில் இருந்து 7வது சீசன் வரை தொடர்ந்து தொகுத்து வழங்கி வந்தவர் உலகநாயகன் கமல் ஹாசன். ஆனால், இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளார்.
வருகிற பிக் பாஸ் 8வது சீசனை கமல் ஹாசன் தொகுத்து வழங்கப்போவதில்லை என அவரே நேற்று அறிவித்துவிட்டார். இதனால் வேறு யார் கமலுக்கு பதிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இதில் கமலுக்கு பதிலாக நடிகை நயன்தாரா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதாக சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
ஏற்கனவே பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியை கமல் ஹாசனுக்கு பதிலாக நடிகர் சிம்பு தொகுத்து வந்தார். இதனால் அவர் தான் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என சொல்லப்பட்ட வந்த நிலையில், அது வெறும் வந்தந்தி தான் என்கின்றனர்.
இந்த நிலையில், தற்போது வெளிவந்துள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய் சேதுபதி இருவரிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
அதே போல் நடிகை ரம்யா கிருஷ்ணன், அரவிந்த் சாமி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோரின் பெயர்களும் இதில் அடிபடுகிறது.
இவர்கள் இவர்கள் அனைவருக்குமே ஏற்கனவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அனுபவம் இருக்கிறது. ஆனால் இந்த தகவல் அனைத்தும் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.