யுத்த காலத்தில் நாட்டை விட்டு தப்பியோடிய நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தற்போது அவரின் சொத்துக்களை பாதுகாக்கவே அரசியல் நாடகம் செய்து வருகிறார் என இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இடம்பெற்ற உடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்ட பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
மகிந்த ராஜபக்சவின் முகாமுக்குள் பதுங்கி இருந்தே தனது அரசியலை சாணக்கியன் ஆரம்பித்தார் என ஒரு கருத்து பேசப்படுகிறது.
அதன் பின்னர் அனைத்து விதமான தேர்தல்களிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்து இறுதியாக தமிழரசு கட்சிக்குள் நுழைந்து அரசியலை நகர்த்துவதாகவும் பேசப்படுகிறது.
இவை அனைத்தையும் அவர் ஏற்றுக்கொள்வாரா என பகிரங்கமாக சவால் விடுகிறேன்.
முகப்புத்தகத்தில் வரும் போலி செய்திகளை வைத்து நியாயமற்ற அரசியலை நகர்த்தும் இவர் நேர்மை மிகு மக்கள் பிரதிநிதியா? என கேள்வி எழுகிறது” என்றார்.
Comments are closed.