ஹமாஸ் தலைவர் படுகொலை தொடர்பில் வெளியான தகவல்

16

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) 7 கிலோ எடையுள்ள குறுகிய தூர ஏவுகணையால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாக ஈரான் புரட்சிகர காவலர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹமாஸ் (Hamas) இயக்கத்தின் அரசியல் துறைப் பிரதானியும் அமைப்பின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவருமான இஸ்மாயில் ஹனியா ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

இஸ்மாயில் ஹனியா கொல்லப்பட்ட சம்பவம் மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையிலேயே, ஈரான் புரட்சிகர காவலர்கள் அமைப்பு இஸ்மாயில் ஹனியாவை தாக்கிய ஏவுகணை தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளது.

அத்துடன், இஸ்ரேலுக்கு தகுந்த நேரத்தில் இதற்கான பதிலடி வழங்கப்படும் என குறித்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், இஸ்மாயிலின் மரணத்திற்கு பயங்கரவாத சியோனிச ஆட்சியே காரணம் என்றும் ஈரான் புரட்சிகர காவலர்கள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

Comments are closed.