ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து பொதுவாக என் மனசு தங்கம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்த நடிகை நிவேதா பெத்துராஜ் பாலிவுட்டில் கடந்த ஆண்டு வெளிவந்த வெப் சீரிஸில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் கூட நிவேதா பெத்துராஜை சுற்றி சில சர்ச்சைகள் எழுந்தன. அதற்கு தக்க பதிலடியும் கொடுத்து பதிவு ஒன்றை வெளியிட்டார். அதன்பின் அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், திடீரென நிவேதா பெத்துராஜின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. போலீஸ் இடம் சிக்கி வாக்குவாதம் நடந்து வருகிறது, இதற்கிடையில் கோபமடையும் நிவேதா பெத்துராஜ் கேமராவை மறைத்துவிடுகிறார்.
இது உண்மையாகவே நடந்த சம்பவமா இல்லை படத்தின் ப்ரோமோஷனா என சந்தேகத்தை கிளப்பியுள்ளது. ஏனென்றால் இதுபோன்ற ப்ரோமோஷன் யுத்திகளை தற்போது பலரும் கையாண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கஸ்டடி படத்திற்காக கூட வெங்கட் பிரபு கைது என கூறி விஷயம் ஒன்று இணையத்தில் வைரலானது. இறுதியில் அது அப்படத்திற்கான ப்ரோமோஷன் என தெரியவந்தது. அதே போல் இதுவும் இருக்கலாம் என்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் உண்மை என்னவென்று.
Comments are closed.