பக்கத்தில் இளம் நடிகை! சரக்கு அடித்தாரா பாலகிருஷ்ணா.. வைரலாகும் வீடியோ

14


தெலுங்கு திரையுலகில் ஆக்ஷன் ஹீரோ என்றால் அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது பாலகிருஷ்ணாவின் பெயர் தான்.

சாதாரணமான ஆக்ஷன் ஹீரோ அடித்தால் எதிரிகள் மட்டும் தான் பறப்பார்கள், அதுவே பாலையா என்றால் அங்கிருக்கும் கார், லாரி உள்ளிட்ட பல விஷயங்கள் காற்றில் தான் மிதக்கும் இவர் ஒரு வார்த்தை சொன்னால் Train கூட பின்னால் போகும்.

இதை மற்றவர்கள் செய்தால் அதை நெட்டிசன்கள் உடனடியாக கலாய்த்து விடுவார்கள். அதே பாலையா ‘அது தான் டா மாஸ்’ என கூறுவார்கள். அந்த அளவிற்கு அனைவரிடமும் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.

சமீபத்தில் கேங்ஸ் ஆப் கோதாவரி திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த ப்ரோமோஷன் விழாவில் கலந்துகொண்ட பாலையா ஹீரோ மற்றும் ஹீரோயினுக்கு இடையே அமர்ந்திருந்தார்.

நிகழ்ச்சி ஒரு பக்கம் நடந்துகொண்டு இருக்க கேமராமேன் பாலையாவை ஃபோகஸ் செய்துவிட்டார். இதை கவனித்த நெட்டிசன்கள் பாலையாவில் இருக்கையில் கீழே தண்ணீர் பாட்டல் மற்றும் சாருக்கு பாட்டல் இருக்கிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Comments are closed.