இன்றைய ராசிபலன் ஜூலை 25, 2024, குரோதி வருடம் ஆடி 9, வியாழக் கிழமை, சந்திரன் கும்பம் ராசியில் பூரம், சஞ்சரிக்கிறார். கடகம், சிம்ம ராசியில் உள்ள அஸ்வினி, பரணி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் மரியாதை பெறுவீர்கள். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. கடன் வாங்க நினைப்பவர்களுக்கு அதில் வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடன் உறவு வலுவடையும். சகோதரரின் உடல்நிலை சற்று கவலை தரும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் பரபரப்பான சூழல் இருக்கும். இன்று மனம் மற்றும் உடல் உழைப்பு அதிகமாக ஏற்படும். அதனால் சோர்வாக உணர்வீர்கள். உங்களின் சிறப்பான முடிவு எடுக்கும் திறனால் நல்ல பலன் பெறுவீர்கள். நிலுவையில் உள்ள சில வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். ஏதேனும் பிரிவு இடத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு சாதகமான சூழல் இருக்கும். இன்று மங்கள நிகழ்வுகளில் பங்கேற்பீர்கள்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்றுபணியிடத்தில் எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். சிலர் உங்களுக்கு தீங்கு செய்ய முயற்சிக்கலாம். உங்கள் வேலைகளை புத்திசாலித்தனமாக செய்து முடிப்பீர்கள். உடல்நல பிரச்சினை தொந்தரவு தர வாய்ப்புள்ளது. இன்று போட்டி தேர்வுகளில் நடைபெற்ற எதிர்பார்க்கலாம். பிள்ளைகளிடம் வந்து சில நல்ல செய்திகள் பெறுவீர்கள். உங்களுக்கு பண பலன்கள் கிடைக்கும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட காலமாக தொழிலில் நீங்கள் செய்த கடின உழைப்பின் நற்பலனை அறுவடை செய்வீர்கள். உங்கள் பிள்ளைகளும் மீது நம்பிக்கை அதிகரிக்கும். தாய் வழி சொந்தங்களின் அன்பையும், பாசத்தையும் பெறுவீர்கள். இன்று ஆரோக்கியத்தை சிறப்பு கவனம் தேவை.. உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு அதிருப்தி ஏற்படலாம். இன்று உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி, இனிமையான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டிய நாள். இல்லையெனில் உறவில் விரிசல் ஏற்படும். இன்று கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய யுத்தியை பயன்படுத்தி வேகம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் திருமணம் தொடர்பாக நல்ல முடிவை எடுப்பீர்கள். காதல் வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் செயலுக்கு பெற்றோரின் ஆதரவை பெறுவீர்கள். வியாபாரியில் புதிய ஒப்பந்தங்கள் பெற வாய்ப்புள்ளது. இன்று அச்சத்தை விடுத்து, நம்பிக்கையுடன் செயல்பட கடினமான சவால்களை எதிர்கொள்ள முடியும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள், தகராறுகள் ஏற்படலாம். பெற்றோரின் ஆலோசனையின் நற்பலனைதரும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் உரிமைகள் மற்றும் சொத்துக்கள் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடினமான நேரத்தில் நண்பர்களின் உதவியை பெறலாம். உங்களின் புதிய முதலீடுகள் தொடர்பான விஷயத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் புதிய வேலை வாய்ப்புகளை பெறுவீர்கள். இன்று மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று சில காரணங்கள் பணி சுமை அதிகமாக இருக்கும். மனதளவில் அமைதியின்மையை உணர்வீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சியில் நல்ல வெற்றி பெறலாம். நிதிநிலை பலப்படும். சிலரிடம் உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கும். வாழ்க்கைத் துணையின் உடல் நிலையில் கவனம் தேவை. இன்று அதிக அலைச்சல் இருக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் கவனம் தேவை. . சிலருக்கு வயிறு வலி, வாயுத்தொல்லை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். உங்கள் உணவு பழக்க வழக்கத்தில் கவனம் தேவை. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் குறித்து விவாதிப்பீர்கள். குடும்ப பெரியவர்களின் ஆலோசனை கிடைக்கும். ஆன்மீக சடங்கில் ஆர்வத்துடன் பங்கேற்பீர்கள்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று சில சிறப்பான பணவரவு கிடைக்கும். அதே சமயம் தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடிய நாள். தாய் வழியில் மரியாதை அதிகரிக்கும். இன்று உங்கள் செயல்பாட்டில் மனைவியின் முழு ஆதரவை பெறுவீர்கள். இன்று உங்களின் நிலுவையில் உள்ள பணிகளை சிறப்பாக முடிக்க முடியும். நீங்கள் தொழில் செய்யக்கூடிய முதலீடுகள் மூலம் எதிர்காலத்தில் பெரிய லாபத்தை பெறுவீர்கள்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் வேலையை சிறப்பான வெற்றி கிடைக்கும். எதிரிகளின் பிரச்சினை குறையும். உங்களின் வருமானம் குறைய வாய்ப்புள்ளது. அதனால் நிதிநிலை சிக்கலை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. தொழில் நிமித்தமான பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று சட்ட தகராறுகள் தீரும். இன்று நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிப்பீர்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். உங்களின் நம்பிக்கை, வளர்ச்சி அதிகரிக்கும். எந்த செயலிலும் மன உறுதியுடன் செயல்பட நற்பலனை பெறுவீர்கள். வியாபாரத்தில் ஏற்ற இறக்கத்தை சந்திக்க நேரிடும். இருப்பினும் இன்று உங்களின் நிதிநிலை பலப்படும்.
Comments are closed.