விஜய் ஆண்டனி கன்னியாகுமாரி மாவட்டத்தில் பிறந்து, தனது இளங்கலை பட்டத்தினை லயலோ கல்லூரியில் படித்து, பின்னர் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகியவர்.
இவர் திரைப்படங்களுக்கு இசையமைப்பதற்கு முன்பே தொலைக்காட்சி தொடர்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இது மட்டும் இல்லாமல் இவர் பாடல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அது மட்டுமின்றி விஜய் ஆண்டனி ஆத்திசூடி,டைலாமோ,நாக்கு முக்க பாடல்கள் மூலம் திரையுலகத்தில் பிரபலமானார்.
சமீப காலமாக நடிப்பில் அதிகம் கவனம் செலுத்தி வருவதால் மற்ற ஹீரோ படங்களுக்கு விஜய் ஆண்டனி இசையமைப்பதை நிறுத்தி இருந்தார்.
இந்நிலையில் தற்போது சமீபத்தில் விஜய் ஆண்டனி கொடுத்த பேட்டி ஒன்றில் தான் ஒரு ஸ்டூடியோ கட்டிக் கொண்டிருப்பதாகவும், அடுத்த வருடம் முதல் மற்ற நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு மியூசிக் கம்போஸ் செய்ய போவதாகவும் கூறியுள்ளார்.
இந்த நியூஸ் அவரின் ரசிகர்களுக்கு ஒரு பெரிய ட்ரீட் ஆக அமைந்திருக்கிறது.
Comments are closed.