காத்தான்குடியில் குண்டு தாக்குதல் இடம்பெற்ற வீட்டிற்கு அருகில் கைக்குண்டு மீட்பு

10

மட்டக்களப்பு – காத்தான்குடி, பூநொச்சிமுனையில் குண்டு தாக்குதலுக்கு இலக்கான வீடு ஒன்றிற்கு அருகிலுள்ள வீடு ஒன்றின் முன்னால் உள்ள வடிகான் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கைகுண்டானது நேற்று(21) இரவு மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பூநொச்சிமுனையில் பச்சை வீட்டுத்திட்டம் என அழைக்கப்படும் முகைதீன் ஜூம்ஆஹ பள்ளி வீதியில் வீடு ஒன்றின் முன்னால் உள்ள வடிகானுக்கு அருகில் கைவிடப்பட்ட கைக்குண்டு ஒன்று கிடப்பதை சம்பவதினமான நேற்று(21) இரவு அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று கைவிடப்பட்டிருந்த கைக்குண்டை மீட்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துவருவதுடன் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவின அழைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை, இந்த கைக்குண்டு மீட்கப்பட்ட வீட்டிற்கு அருகிலுள்ள வீட்டின் மீது கடந்த 15 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு அடையாளம் தெரியாதோரால் தயாரிக்கப்பட்ட புதியவகையான குண்டு வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.