கஞ்சிபானை இம்ரானின் போதைப்பொருள் கடத்தலுக்கு தலைமை தாங்கிய மூவர் கைது

18

பாதாள உலகக்கும்பலின் தலைவர் கஞ்சிபானை இம்ரானின் போதைப்பொருள் கடத்தலுக்கு தலைமை தாங்கிய பெண் ஒருவர் உட்பட இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராகம, வெலிசர மற்றும் வெல்லம்பிட்டிய பிரதேசங்களில் வசிக்கும் 24 மற்றும் 28 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரனுமான கஞ்சிபானை இம்ரானின்  போதைப்பொருள் கடத்தலை செல்வகுமார் ரஞ்சித் என்பவர் வழிநடத்தி வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபானை இம்ரானுக்கு எதிராக சர்வதேச பொலிஸார் ஏற்கனவே சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.