இன்றைய ராசி பலன் 21.07.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

16

இன்றைய ராசிபலன் ஜூலை 21, 2024, குரோதி வருடம் ஆடி 5, ஞாயிற்று கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷபம் ராசியில் உள்ள சேர்ந்த ரோகிணி, மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று வேலைப்பளு அதிகமாக இருக்கக்கூடிய நாள். உங்கள் வியாபாரம் தொடர்பாக புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வேலை தொடர்பாக சிந்தனையுடன் செயல்படுவீர்கள். உங்களின் சுயமரியாதை அதிகரிக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மூலம் சில நல்ல செய்திகள் பெறுவீர்கள். வாழ்க்கை பிரகாசமாகும். வியாபாரிகள் உங்களின் அணுகுமுறையை மாற்ற முயற்சி செய்யவும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு நல்ல முன்னேற்றம் தரக்கூடிய நாள். உங்களின் புகழ் அதிகரிக்கும். மன மகிழ்ச்சியாக உண்டாகும். பண தேவைகள் நிறைவேறும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். வணிகத்துறையில் உங்கள் கூட்டாளிகள் மூலம் சாதக பலன்கள் கிடைக்கும். அரசியலில் வளர்ச்சி காண்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் உறவு மேம்படும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் தொடர்பான விஷயத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளின் வேலை தொடர்பாக மகிழ்ச்சி உண்டாகும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடிவடையும். குடும்ப உறுப்பினர்களுடன் உறவு இனிமையாக இருக்கும். இன்று குடும்பத்தினருடன் பயணம் உள்ளது சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ஆரோக்கியத்தைக் கவனமாக இருக்கவும். வேலைப்பளு காரணமாக உடல் நிலை மோசம் அடைய வாய்ப்புள்ளது. இன்று வெளி உணவை சாப்பிடுவதையும், குடிப்பதையும் தவிர்க்கவும். குழந்தையின் எதிர்காலம் தொடர்பாக கவலைப்படுவீர்கள். மாணவர்களின் மேல் படிப்பு தொடர்பாக செலவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும், செழிப்பும் நிறைந்திருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிட வாய்ப்பு உண்டு. சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று உங்களின் உண்மையான அர்ப்பணிப்பு மற்றும், கடின உழைப்பால் சிறப்பான வெற்றியை பெறுவீர்கள். இன்று கோபத்தைக் கட்டுப்படுத்தி, பேச்சில் இனிமையை கடைப்பிடிக்கவும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று உங்கள் முக்கிய வேலைகளை முடிப்பதில் சகோதரர், சகோதரிகளின் ஆதரவைத் தெரிவீர்கள். வேலை தொடர்பாக பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சொத்து வாங்குதல், விற்பது தொடர்பாக ஆதாயம் அடைவீர்கள்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று வாழ்க்கைத் துணையுடன் மனம் விட்டு பேச வாய்ப்பு கிடைக்கும். இன்று கடினமான சூழ்நிலையில் தந்தையின் ஆலோசனை ஆறுதலைத் தரும். பணி புரியும் இடத்தில் பாராட்டுக்கள் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய வருமான வாய்ப்புகள் உண்டாகும். இன்று கடன் தொகை குறைக்க வாய்ப்புள்ளது. நண்பர்களுடன் மகிழ்ச்சியாகப் பேசி மகிழ்வீர்கள்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று வேலை மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயத்தில் எதிரிகளின் பிரச்சினையை சமாளிக்க வேண்டியது இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், செழிப்பும் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் சரியான திட்டத்துடன் செயல்பட நல்ல வெற்றியை எதிர்பார்க்கலாம். வணிகத்தை மேம்படுத்துவதற்காக ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று திடீரென சில வழிகளில் பண பலம் பெறுவீர்கள். எதிர்காலம் தொடர்பான கவலைகள் குறையும். குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கடினமான முடிவே எடுப்பீர்கள். பணியிடத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். தேவையற்ற சர்ச்சை மற்றும் தகராறுகளில் ஈடுபட வேண்டாம். இன்று சட்ட விஷயத்தில் கவனம் தேவை.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலைகளில் மும்முரமாகச் செயல்படுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படவும். இன்று நினைத்த வகையில் அனைத்து பணிகளிலும் முடிக்க முடியும். இன்று உங்களின் மரியாதை அதிகரிக்கும். பணியிடத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று புதிய சொத்து வாங்கும் முயற்சிகள் நிறைவேறும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் குழந்தைகளிடம் வந்து சில நல்ல செய்திகள் பெறுவீர்கள். நண்பர்களிடமிருந்து பரிசு கிடைக்கும். உங்களின் உடல்நிலை குறித்த கவலைகள் அதிகரிக்கும். எனவே உணவு மற்றும் உடற்பயிற்சியில் கவனம் தேவை. தொழில் நிமித்தமான பயணங்கள் நம்மை தரும்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறக் கூடிய நாள். திருமண முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது. குடும்பத்துடன் பயணம் செல்ல வாய்ப்புள்ளது. ஆன்மீக செயல்பாட்டில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் சகோதரர்களின் ஆலோசனை, உதவி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறப்பான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

Comments are closed.