இளைஞர் எடுத்த விபரீத முடிவு

16

பதுளை – கொழும்பு தொடருந்து பாதையில் உறங்கி இளைஞரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ரம்புக்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பத்தம்பிட்டி, ரம்புக்கன, எலுகல்ல கிராமத்தைச் சேர்ந்த 36 வயதுடைய திருமணமாகாத இளைஞனே கடந்த (17) திகதி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தந்தை மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் தாயார் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர் தனது பாட்டியின் மரணத்திற்குப் பிறகு சலூன் ஒன்றை ஆரம்பித்து, தனது அத்தையின் பராமரிப்பில் குறித்த இளைஞன் வாழ்ந்து வந்துள்ளார்.

இதன்போது பதுளை பிரதேசத்தில் உள்ள யுவதி ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டிருந்த நிலையில் குறித்த யுவதி உறவை நிறுத்தியதால் மனமுடைந்து பதுளை – கொழும்பு தொடருந்து பாதையில் படுத்து உறங்கி தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக சடலம் கேகாலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தின்தொடருந்தின் சாரதி திடீர் மரண விசாரணையின் போது வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்த இளைஞரின் பிரேத பரிசோதனை நேற்று (19) கேகாலை பொது வைத்தியசாலையின் உதவி சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.எம்.ஆர்.பி. குணவர்தனவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையின் பின்னர், சடலத்தை பொலிஸார் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதுடன், உயிரிழந்த இளைஞரின் இறுதிக் கிரியைகள் இன்று (20) பத்தம்பிட்டியவில் இடம்பெறவுள்ளன.

Comments are closed.