ட்ரம்ப்பின் உயிரை காப்பாற்றிய இந்து கடவுள்! 48 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய கதை

14

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) உயிரை காப்பாற்றியது இந்துக் கடவுளான ஜகன்னாத் என இந்தியாவின் கொல்கத்தா நகரத்தில் உள்ள இஸ்கான் கோயில் துணைத் தலைவர் ராதாராமன் தாஸ் தெரிவித்துள்ளார்.

தனது ‘X’ தளத்தில் இட்ட பதிவொன்றின் மூலமே அவர் இதனைக் கூறியுள்ளார்.

48 ஆண்டுகளுக்கு முன்னர், டொனால்ட் ட்ரம்ப் ஜகன்னாத் ரத யாத்திரை விழாவைக் காப்பாற்றியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று, உலகம் மீண்டும் ஜகன்னாத் ரத யாத்திரை விழாவைக் கொண்டாடும் போது, சுடப்பட்ட ட்ரம்பை ஜகன்னாத் காப்பாற்றினார் என்று அவர் கூறியுள்ளார்.

1976ஆம் ஆண்டு ‘ISKCON’ சங்கம் நியூயார்க் நகரத்தில் முதல் ரத யாத்திரையை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டிருந்தது.

இதன்போது, ‘ISKCON’ சங்கம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. அத்துடன், ஐந்தாவது அவென்யூவில் அணிவகுப்பு மறுக்கப்பட்டிருந்தது.

அந்த நேரத்தில் ட்ரம்ப், அமெரிக்க கிருஷ்ண பக்தர்களுக்கு நம்பிக்கையாக இருந்ததாக ராதாராமன் தாஸ் கூறினார்.

ட்ரம்பின் செயலாளர் பக்தர்களை அழைத்து, அவர்களின் கையொப்பமிடப்பட்ட அனுமதி கடிதங்களை கொண்டு வருமாறு கூறியதாகவும், ரத யாத்திரையை அனுமதிக்கும் ஆவணங்களில் அப்போது பெருநிறுவன உரிமையாளராக இருந்த ட்ரம்ப் கையெழுத்திட்டதாகவும் ராதாராமன் தாஸ் பதிவிட்டுள்ளார்.

ட்ரம்ப் நினைத்திருந்தால், ஏனைய பெருநிறுவன நிறுவன உரிமையாளர்களைப் போல அவரும் அனுமதியை நிராகரித்திருக்கலாம் என ராதாராமன் தாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments are closed.