பாதாள உலகக்குழுக்களின் உதவியை நாடும் அரசியல்வாதிகள்

15

மாகந்துறை மதுஷிடம் பணத்தை முதலீடு செய்து அவரது மரணத்தின் பின்னர் பணத்தை மறைத்த பல அரசியல்வாதிகளும், மதுஷுடன் தொடர்பினை வைத்திருந்த பலரும் பல்வேறு பாதாள உலகக் குழுக்களின் உதவியை நாடியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மாகந்துரே மதுஷிடம் பல கோடி ரூபாவை முதலீடு செய்து திருப்பித் தராமல் மோசடி செய்த குற்றச்சாட்டில் கிளப் வசந்த அத்துருகிரியில் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து இவ்வாறு உதவியை நாடியுள்ளதாக டுபாயில் இருந்து கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

கிளப் வசந்தவின் மரணத்திற்கு பின்னர் மாகந்துறை மதுஷிடம் பணத்தை மோசடி செய்த பலர் பயந்து, கஞ்சிபானை இம்ரானிடம் தங்களை காப்பாற்றுமாறும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

மாகந்துறை மதுஷின் மரணத்திற்குப் பின்னர், மதுஷின் வர்த்தக வலையமைப்பைக் கைப்பற்றி, மதுஷின் விசுவாசமான சீடர்களை கொன்று குவித்தவர்கள் அத்துருகிரிய சம்பவத்தின் பின்னர் அச்சமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாகந்துறை மதுஷுடன் இருந்த ரொடும்ப அமில, லொக்கு பட்டி, பொடி பட்டி போன்றவர்களின் குழுக்கள் மதுஷின் வலையமைப்பில் பணத்தினை வசூலித்து மதுஷின் கொலைக்கு பழிவாங்க ஆரம்பித்துள்ளமையினால் எதிரணியினர் அச்சமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Comments are closed.