சாவகச்சேரி வைத்தியசாலை வளாகத்தில் வைத்தியர் அர்ச்சுனா

14

வடக்கு மாகாணத்தில் உள்ள எந்த வைத்தியசாலைக்கு சென்றாலும் அதனை முன்னிலைப்படுத்த செயற்படுவேன் என சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா எடுத்துரைத்துள்ளார்.

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு இன்று சென்றிருந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.

தனக்கு இதுவரையில் உத்தியோகபூர்வமான கடிதங்கள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும், அவ்வாறு வழங்கினால் அரசாங்கத்தின் திட்டமிடலுக்கு அமைவாக செயற்படுவேன் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments are closed.