இந்தியன் படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

16

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் 1996ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இந்தியன்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் 28 ஆண்டுகள் கழித்து இன்று வெளியாகியுள்ளது. இந்தியன் 2 படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 1996ல் வெளிவந்த இந்தியன் முதல் பாகத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 61 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதில் இந்தியளவில் ரூ. 53.7 கோடியும், வெளிநாட்டில் ரூ. 7.76 கோடியும் வசூல் செய்துள்ளது என சொல்லப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 20 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்கின்றனர்.

Comments are closed.