திரைக்கு வந்த இந்தியன் 2…. கமலஹாசன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

11

தமிழ் திரையுலகமே கொண்டாடும் மாபெரும் நடிகர் உலக நாயகன் கமலஹாசன். இவர் நடிப்பில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் இன்று ரிலீசாகியுள்ளது. இந்த படத்திற்காக அவர் போற்றுக்கொண்ட சம்பளம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா துறைக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடன கலைஞர், நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல துறைகளிவ் களமிறங்கி தனது முழு திறமையை காட்டி இப்போது ரசிகர்களால் ஆண்டவர் என கொண்டாடப்படுபவர் தான் கமல்ஹாசன்.

இப்போது ஷங்கருடன் கூட்டணி அமைத்து இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார், படமும் இன்று ரிலீஸ் ஆகிவிட்டது. இந்த படத்திற்கு ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பு இருந்தநிலையில் ரசிகர்களிடமிருந்து படத்திற்கு நல்ல விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இந்தியக் 2 படத்திற்காக கமல்ஹாசனுக்கு லைகா நிறுவனம் ரூ 150 கோடி சம்பளம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Comments are closed.