இந்திய அணியின் புதிய பயிற்சியாளரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

49

இந்திய (india) அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் (Gautam Gambhir) மூன்றரை ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

ராகுல் டிராவிட் (Rahul Dravid) இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த போது ஆண்டுக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டிராவிடை விட கூடுதல் சம்பளம் வேண்டும் என கம்பீர் கேட்டதன் காரணமாகவே அவரை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக இந்திய கிரிக்கட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கௌதம் கம்பீருக்கு எவ்வளவு சம்பளம் மட்டும் சலுகைகள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அந்த வகையில் அவருக்கு ஆண்டுக்கு ரூ.12 கோடியை விட அதிக சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் சென்றால் நாள் ஒன்றுக்கு தினப்படியாக ரூ. 21 ஆயிரம் வழங்கபட உள்ளது.

இதை தவிர வெளிநாட்டிற்கு சென்றால் 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கும் வசதியும் மற்றும் சலவை செலவுகள் ஆகியவற்றிற்கும் விசேட கொடுப்பனவுகள் வழங்கப்படுகிறது.

Comments are closed.