வருகிற 12ஆம் தேதி தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் இந்தியன் 2 திரைப்படம் வெளிவரவுள்ளது.
இப்படத்தின் ப்ரீ புக்கிங் மட்டுமே இதுவரை ரூ. 13 கோடிக்கும் மேல் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். கமல் ஹாசனுடன் இணைந்து இப்படத்தில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்தியன் 2 படத்தை பார்க்க வரவிருக்கும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக ஒரு விஷயம் நடக்கவுள்ளது. டாப் ஸ்டார் நடிகர் பிரஷாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் அந்தகன் திரைப்படத்தின் ட்ரைலரை இந்தியன் 2 இடைவேளையில் திரையிட முடிவு செய்துள்ளார்களாம். இது கண்டிப்பாக ரசிகர்களுக்கு சர்ப்ரைசாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தியாகராஜன் இயக்கத்தில் பிரஷாந்த் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது. இந்தியில் வெளிவந்த அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் தான் இப்படம்.
இப்படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் இப்படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.