மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த பியுமி

15

தனக்கு எதிராக நடத்தப்படும் சட்டவிரோத விசாரணைகளை தடுத்து நிறுத்துமாறு கோரி மொடல் அழகி பியுமி ஹன்சமாலியினால் (Piumi Hansamali) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்து சேர்த்ததாக எழுந்த முறைப்பாட்டின் பேரில், சட்டவிரோத சொத்துக்கள் குறித்த விசாரணைப் பிரிவினர் பியுமி மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையிலேயே, குறித்த விசாரணைகளை உடன் தடுத்து நிறுத்துமாறு பியுமி ஹன்சமாலி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பெயரிடப்பட்டுள்ளனர்.

தமக்கு எதிராக நடத்தப்படும் விசாரணை நியாயமானதாக இல்லை என்றும், அவர்கள் கடும் பாரபட்சமாக செயற்படுவதாகவும் பியுமி, அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments are closed.