மீண்டும் முதலிடத்தில் வனிந்து ஹசரங்க!

52

இருபதுக்கு 20 சகலதுறை வீரர்களுக்கான புள்ளிப் பட்டியலில் இலங்கை அணித்தலைவர் வனிந்து ஹசரங்க (Wanindu Hasaranga) மீண்டும் முதலிடத்தை பெற்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் (ICC) வெளியிடப்பட்டுள்ள பட்டியலின் படி வனிந்து ஹசரங்க 222 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

அந்தவகையில், இந்திய அணியின் வீரர் ஹர்திக் பாண்டியா (Hardic Pandya) 213 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், அவுஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் (Marcus Stoinis) 211 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், இலங்கை அணியின் வீரர் தசுன் சானக்க (Dasun Shanaka)15 ஆம் இடத்திலும் உள்ளனர்.

அத்துடன், சில வாரங்களுக்கு முன் சகலதுறை வீரர்களுக்கான புள்ளிப் பட்டியலில் 222 புள்ளிகளைப் பெற்று ஹர்திக் பாண்டியா மற்றும் இலங்கை அணித்தலைவர் வனிந்து ஹசரங்க ஆகியோர் சமநிலையிலிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.