ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களினால் நேற்றயை தினம் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்கப் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்க ஒன்றியம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததாக, இலங்கை ஆசிரியர் சங்க ஒன்றியத்தின் தலைவர் யல்வேப பஞ்ஞாசேகர தேரர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் நேற்றைய தினம் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதேவேளை, இந்த தொழிற்சங்க போராட்டத்தின் மூலம் ஆட்சியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட செய்தியை அவர்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Comments are closed.