கனடாவில் வாடகை வீடு பெறுவதில் இப்படியொரு சிக்கலா?

12

கனடாவில் பெண் ஒருவர் வளர்க்கும் நாய் காரணமாக வாடகை வீடு ஒன்றை பெற்றுக் கொள்வதில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றார்.

ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட மகனுக்கு சேவைகளை வழங்கி வரும் நாயை, பல வீட்டு உரிமையாளர்கள் அனுமதிக்க மறுப்பதாக அவர் தெரிவிக்கின்றார்.

இதனால் தம்மால் வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொள்ள முடியாது நெருக்கடிகளை எதிர் நோக்க நேரிட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

கடந்த ஆறு மாதங்களாக புதிய வீடு ஒன்றை தேடி வருவதாக இசபெல்லா லீப்பிளாங்க் தெரிவித்துள்ளார்.

செல்ல பிராணிகளை வளர்த்து வரும் நபர்களுக்கு வீடுகள் வாடகைக்கு விடப்படுவது குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது மகன் ஆட்சிம் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மகனை சமாதானப்படுத்தவும் மகனுக்கு தேவையான சில உதவிகளை வழங்கவும் இந்த நாய் வளர்க்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஒரு பின்னணியில் நாய் இன்றி வீடு ஒன்றில் குடியேற முடியாது என இசபெல்லா தெரிவித்துள்ளார்.

நாய்கள் அல்லது செல்லப் பிராணிகள் தொடர்பில் வீடுகள் வாடகைக்கு வழங்கப்படும் போது காணப்படும் சட்டங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என வாடகைக் குடியிருப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.