யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெறும் பொறுப்பற்ற நடவடிக்கைகள் அனைத்தையும் வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி கண்டுகொள்வதில்லை என இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் காய்ச்சல் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட மல்லாகம் பகுதியை சேர்ந்த சிறுமி வைசாலியின் கை அகற்றடப்பட்டமை தொடர்பில் வைத்தியர் சத்தியமூர்த்தி பாராமுகமாக செயற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இது ஒரு பிழையான விடயம். இதற்கு யார் பொறுப்பு கூறுவது என கேள்வி எழுப்பியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பொலிஸில் முறைபாடு செய்து நீதிமன்றை நாடுவதற்கு முன்னர் அதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் எனவும் விளக்கமளித்துள்ளார்.
ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் காலம் தாழ்த்தபடுவதன் காரணமாகவே வடமாகாண வைத்தியதுறை நலிவடைந்து செல்கின்றது எனவும் வைத்தியர் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார்.
Comments are closed.