சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக அமைதியின்மை

20

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரான அர்ச்சுனாவை பலாத்காரமாக கைது செய்வதற்கு பொலிஸார் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்போது, பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர், சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் சென்றிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், வைத்தியசாலையின் பிரதான மின் கட்டமைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், வைத்தியசாலையில் இருந்த ஊடகவியலாளர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளதுடன் எந்நேரமும் பதற்றநிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

Comments are closed.