நயன்தாரா நடிக்காமல் இருந்து இருக்கலாம்.. பிரபல இயக்குனர் ஓபன் டாக்!!

14


தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வந்துகொண்டு இருக்கிறார் நயன்தாரா. ஜவான் திரைப்படத்திற்கு பின் இந்தியளவில் தனி இடத்தை பிடித்துள்ளார்.
இதை தொடர்ந்து பாலிவுட் பட வாய்ப்புகள் நயன்தாராவிற்கு தொடர்ந்து வருவதாகவும் சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

இதுவரை 75 படங்களில் நடித்திருக்கும் நயன்தாரா, இப்போது மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தற்போது மலையாள பட ஒன்றில் கமிட்டாகி இருக்கிறார்.

இந்நிலையில் நயன்தாராவை வைத்து கஹானி படத்தை ரீமேக் செய்த தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முல்லா கூறுகையில், கஹானி படம் ரீமேக்கான அனாமிகா படத்தை இயக்க வேண்டாம் என்று முதலில் நினைத்தேன். இருப்பினும் பெண்களை வைத்து ஒரு படம் எடுக்க விரும்பினேன்.

முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா இந்த படத்தில் நடித்தால் நல்ல வரவேற்பு இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் படம்தோல்வியை சந்தித்து. அந்த படத்தில் நயன்தாராவை நடிக்க வைத்தது தவறான தேர்வு என்று சேகர் கம்முல்லா பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Comments are closed.