தான் மிகவும் நியாயமான வியாபாரங்களில் பணம் சம்பாதிப்பதாகவும், போதைப்பொருள் வியாபாரம் செய்ததில்லை எனவும் பிரபல மொடல் அழகியான பியுமி ஹன்சமாலி தெரிவித்துள்ளார்.
இன்று (1) பிற்பகல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நாரஹேன்பிட்டியில் உள்ள சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பெண் தொழில் நடத்தும் போது இதுபோன்ற குற்றச்சாட்டை முன்வைப்பதற்காக வருந்துவதாகவும், தான் நிரபராதி என்றும், என்ன குற்றச்சாட்டுகள் கூறினாலும் பிரச்சினை இல்லை என்றும் கூறியுள்ளார்.
தன்னிடம் 20 வங்கிக் கணக்குகள் இல்லை என்றும், இருக்கும் ஒன்பது கணக்குகளும் வணிகம் தொடர்பானவை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்து சேர்த்ததாக எழுந்த முறைப்பாட்டின் பேரில், சட்டவிரோத சொத்துக்கள் குறித்து விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
Comments are closed.